போர் நடைபெற்று வரும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் செல்கிறார்
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்றிருந்தார்
- ஹமாஸ்க்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு துணை நிற்பதை உணர்த்தும் வகையில் பைடன் பயணம் அமைந்திருந்தது
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல் மிகப்பெரியதாக உள்ளது. ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்றிருந்தார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது, காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை என்றார். தாக்குதல் நடத்தியது வேறு அமைப்பு எனக் கூறினார்.
இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேல் செல்லும் அவர் நேதன்யாகுவை சந்தித்து பேசுகிறார்.
காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஜோ பைடன்- அரபு நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.