உலகம்

இந்திய எல்லையில் உள்ள சீனாவின் பாலத்தில் ராணுவ வாகனங்கள்? காட்டிக் கொடுத்த சாட்டிலைட் காட்சி

Published On 2024-07-30 09:11 GMT   |   Update On 2024-07-30 09:11 GMT
  • 50 - 100 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்து எளிதாக ராணுவத்துருப்புகள் சென்று வருவதற்கு வழிவகை செய்கிறது.
  • பாலத்தின்மீது வாகனம் கடக்கும் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லடாக்கில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் நதியின் [Pangong Lake] குறுக்கே 400 மீட்டர் பாலத்தைச் சீனா கட்டி முடித்தது. இந்த பலமானது சீன துருப்புகள் பாங்காங் நதியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளுக்கு எளிதாகச் சென்று வர உதவும் வகையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்திய எல்லையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைத்துள்ளது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

பாலம் கட்டப்பட்டுள்ள பகுதியானது கடந்த 1958 முதல் சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. ஆனால் அந்த இடத்தின்மீது சீனா உரிமை கொண்டாடுவதற்கு எதிரான நிலைப்பதிலேயே இந்தியா இருந்து வருகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள இந்த பாலமானது நதியைக் கடக்க 50 - 100 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்து எளிதாக ராணுவத்துருப்புகள் சென்று வருவதற்கு வழிவகை செய்கிறது.

 

பலமானது கட்டப்பட்டது முதல் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது பாலத்தின்மீது  வாகனங்கள் கடக்கும் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பகுதிகளுக்கு சீனா தங்களின் வரைபடத்தில் புதிய பெயர்களை சூட்டியும், எல்லையில் ராணுவ நடவைடிகைகளை அதிகப்படுத்தியும் வருவது இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ [ Wang Yi] மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் சந்திப்பில் எல்லையில் உள்ள படைகளைத் திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள இந்த சாட்டிலைட் புகைப்படங்கள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. 

 

 

Tags:    

Similar News