யாரு சாமி நீ.. ஒரே காம்பவுண்டில் மனைவி + 4 காதலிகள்.. 'நான் அவன் இல்லை' படத்தை மிஞ்சிய மோசடி மன்னன்
- விலையுயர்ந்த பொருட்களைப் போன்ற போலி தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் வாங்கி பரிசளித்துள்ளார்.
- குறிப்பாக ஜியாஜூன் மனைவி வாழ்ந்த கட்டடத்திலேயே ஒரு காதலி இருந்துள்ளார்.
உலகம் போகும் வேகத்தில் ஒரு திருமணம் செய்து வாழ்க்கை நடத்தவே அனைவரும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சீன நபர் ஒருவர் மனைவி மற்றும் 4 காதலிகளுடன் ஒரே காம்பவுண்டுகள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் குடிவைத்து 4 வருடங்களாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். ஜியாஜூன் என்ற அந்த நபர் வடகிழக்கு சீனாவில் உள்ள ஜீலின் மாகாணத்தை சேர்ந்தவர்.
பண வசதி இல்லாததால் உயர்நிலைப் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் அளவுக்கு மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டவர் ஜியாஜூன். ஆனால் தான் மிகவும் பணம் படைத்த குடும்பத்தை சேர்த்தவர் என்று ஏமாற்றி ஜியாஜியா என்ற பெண்ணை காதலித்துள்ளார். விலையுயர்ந்த பொருட்களைப் போன்ற போலி தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் வாங்கி ஜியாஜுவுக்கு பரிசளித்து ஏமாற்றியுள்ளார். ஜியாஜியா கர்ப்பமான நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் ஜியாஜுன் பணக்காரர் இல்லை என்று சில காலங்களிலேயே மனைவிக்கு தெரியவந்தது. ஆனால் கணவனை விவகாரத்து செய்யாமல் குழந்தையை தானே வளர்க்க மனைவி முடிவெடுத்துள்ளார். கணவனையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். தொடர்ந்து ஜியாஜுன் ஆன்லைன் மூலம் ஜியாஜாங் என்று மற்றொரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
அவரிடம் இருந்து பணம் பெற்று தனது மனைவி வாழும் வீடு உள்ள காம்பவுண்டிலேயே வீடு ஒன்றை எடுத்து அங்கு ஜியாஜாங் உடன் இருந்துள்ளார். மேலும் இதுமட்டுமின்றி பல்கலைக் கழக மாணவிகள் ஜியாமின், ஜியாசின் மற்றும் நர்ஸ் வேலை பார்க்கும் ஜியாலான் ஆகிய மூவரையும் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். அனைவரிடமிருந்தும் அவ்வப்போது பணம் பறித்தும் வந்துள்ளார்.
மொத்தமாக சுமார் 247 லட்சம் வரை அவர்களிடம் இருந்து ஜியாஜுன் கரந்துள்ளார் . இவர்கள் அனைவரும் ஒரே காம்பவுண்டில் உள்ள கட்டடங்களில் உள்ள வீட்டில் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக ஜியாஜூன் மனைவி வாழ்ந்த கட்டடத்திலேயே ஒரு காதலி இருந்துள்ளார்.
ஆக மனைவி மற்றும் 4 காதலிகளை ஒரே காம்பவுண்டில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஜியாஜுன் கடந்த 4 வருடமாக மெயின்டேன் செய்து வந்துள்ளார். கடைசியில் ஜியாஜுன் காதலிகளில் ஒருவர் அவர் மீது சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்த பின்னர் ஜியாஜுன் குட்டு வெளிப்பட்டுள்ளது.