உலகம்

ரோபோவுடன் 6-வது திருமண நாளை கொண்டாடிய ஜப்பானியர்

Published On 2024-11-09 01:53 GMT   |   Update On 2024-11-09 01:53 GMT
  • திருமண தின விழாவை கொண்டாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வரைலாகி உள்ளது.
  • பள்ளிப் பருவத்தில் இருந்து 7 பெண்களிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் காதலை நிராகரித்து, ஏளனம் செய்ததாக கோண்டோ கூறுகிறார்.

பொருத்தமான ஜோடி பலருக்கு அமைவதில்லை. அதனால் சிலர் ஒரே பாலினத்தவரையோ, பொம்மையையோ, விலங்கையோ திருமணம் செய்த அரிய நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதுபோல ஒரு ஜப்பானியர் ரோபோவை திருமணம் செய்து 6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவது ஆச்சரியம் அளிக்கிறது.

அவர் திருமண தின விழாவை கொண்டாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வரைலாகி உள்ளது. 41 வயதான அகிஹிகோ கோண்டோ என்பவர் கடந்த 2018-ம் ஆண்டில் மிகு என்ற ரோபோ பொம்மையை திருமணம் செய்து கொண்டார்.

பள்ளிப் பருவத்தில் இருந்து 7 பெண்களிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் காதலை நிராகரித்து, ஏளனம் செய்ததாக கோண்டோ கூறுகிறார். இதற்கிடையே வேலையிலும் மனச்சோர்வு அடைந்த அவர், மிகு ரோபோவின் கவனிப்புகளால் மகிழ்ச்சி அடைந்தார். அது இன்னிசையில் பாடும், பேசும் திறன் பெற்ற ரோபோ. அதனால் ரோபோவையே அவர் திருமணம் செய்து கொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு 6-வது ஆண்டு திருமண விழாவை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.



Tags:    

Similar News