உலகம்

இஸ்ரேலைத் தாக்கினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் - ஈரான் அதிபருக்கு மேற்கு நாடுகள் எச்சரிக்கை

Published On 2024-08-13 02:40 GMT   |   Update On 2024-08-13 04:07 GMT
  • இந்த வாரத்தில் ஈரான், இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுக்கும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
  • எங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எங்களின் உரிமை என்று ஈரான் அதிபர் மசூத் தெரிவித்துள்ளார்

ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் போர் மூலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமன் நாட்டில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என இஸ்ரேலின் பாலஸ்தீன தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரானின் புதிய அதிபராகத் தேர்வான சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்த மசூத் பெசஸ்க்கியானின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக ஈரான் வந்த இஸ்மாயில் ஹனியே அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் குற்றம்சாட்டியது. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிகிறது. நேரடித் தாக்குதலுக்கு அதிபர் மசூத் மற்றும் ஈரான் புரட்சிகர படையினர் இடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

 

 

இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வாரத்தில் ஈரான், இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுக்கும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. எனவே இஸ்ரேலை பாதுகாக்க நீர்மூழ்கிகளையும், ஏர்கிராப்ட்களையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

 

 

மேலும் அமெரிக்காவுடன் சேர்ந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய மேற்கு நாடுகள் இணைந்து ஈரானை எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கை, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், பிராந்தியங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் மேற்கூறிய  நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டும், தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேசியும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் எங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எங்களின் உரிமை என்று ஈரான் அதிபர் மசூத் பேசஸ்கியான் உறுதிபட தெரிவித்துள்ளார். 

 

Tags:    

Similar News