உலகம்

கரடியையும் விடாத 'செல்பி' மோகம்: கண்காணிப்பு கேமராவில் 400 முறை 'செல்பி' எடுத்த கரடி

Published On 2023-01-29 01:58 GMT   |   Update On 2023-01-29 01:58 GMT
  • போல்டர் நகரில் 46,000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.
  • விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 9 ‘மோஷன் டிடெக்டிங்’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாஷிங்டன் :

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள போல்டர் நகரில் 46,000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 9 'மோஷன் டிடெக்டிங்' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் விலங்குகள் கடந்து செல்லும் போது புகைப்படங்கள் மற்றும் சிறிய வீடியோக்களை பதிவு செய்யும். பொதுவாக விலங்குகள் உணவு மற்றும் ஓய்வெடுக்கும் இடங்களைத் தேடி செல்லும்போது கேமராக்களில் பதிவாகும்.

ஆனால் அங்குள்ள கரடி ஒன்று ஒவ்வொரு முறையும் வேண்டுமென்றே கேமராவுக்கு அருகில் வந்து நின்று, மனிதர்கள் செல்போனில் 'செல்பி' புகைப்படம் எடுப்பதுபோல விதவிதமான போஸ் கொடுத்து வருகிறது. ஒரு கேமராவில் பதிவான 580 படங்களில் கிட்டத்தட்ட 400 படங்கள் அந்த கரடியின் படங்கள் என பூங்கா ஊழியர்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். மேலும் கரடியின் 'செல்பி' படங்கள் சிலவற்றையும் டுவிட்டரில் அவர்கள் பகிர்ந்துள்ளனர். அவை தற்போது வைரலாக பரவி வருகின்றன.

Tags:    

Similar News