உலகம்

ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்: இந்தியர் பிணமாக மீட்பு- 7 பேரின் கதி என்ன?

Published On 2024-07-19 02:33 GMT   |   Update On 2024-07-19 02:33 GMT
  • கொமாரோஸ் நாட்டின் `பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற அந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்கள் பயணித்தனர்.
  • மீதமுள்ள 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மஸ்கட்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து ஏமனின் ஏடன் துறைமுகத்துக்கு ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது. கொமாரோஸ் நாட்டின் `பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற அந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்கள் பயணித்தனர். அப்போது ஓமன் கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தூரத்தில் அந்த கப்பல் விபத்துக்குள்ளானது. இதனால் கப்பலில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர். மேலும் இந்த விபத்தால் அங்கு எண்ணெய் படலமாக மிதந்தது.

இதுகுறித்து தகவலறிந்த ஓமன் கடலோர போலீசார் அங்கு விரைந்தனர். மேலும் இந்த மீட்பு பணியில் ஓமனுடன் இந்திய கடற்படையும் இணைந்தது. இதன்மூலம் நேற்று 8 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார். அதேசமயம் ஒரு இந்தியர் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து மீதமுள்ள 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News