17 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் போயிங் - ஊழியர்கள் அதிர்ச்சி
- போயிங் தலைமை செயல் அதிகாரி தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
- ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை தொடர்கிறோம்.
உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் அதிரடி பணிநீக்க நடவடிக்கையை துவங்கியுள்ளது. உலகம் முழுக்க பணியாற்றி வரும் போயிங் ஊழியர்களில் 10 சதவீதம் பேர், சுமார் 17 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி ஜனவரி மாத மத்தியில் பணிநீக்க நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளது.
பணிநீக்க நடவடிக்கையில் தெற்கு கரோலினா மற்றும் வாஷிங்டன் ஆலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். பணிநீக்க நடவடிக்கை தொடர்பாக போயிங் தலைமை செயல் அதிகாரி தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், "நாங்கள் ஏற்கனவே அறிவித்தப்படி நிதி சார்ந்த திட்டங்கள் மற்றும் முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஏற்ற வகையில் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை தொடர்கிறோம். சந்தையில் போட்டித்தன்மையை தொடர்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால மதிப்புகளை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை முக்கியமான ஒன்று ஆகும்," என குறிப்பிட்டுள்ளார்.