டிவி பார்த்தது குற்றமா? மகளுக்கு நூதன தண்டனை கொடுத்த தந்தை
- தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.
சீனாவில் நீண்ட நேரம் தொலைக்காட்சியை பார்த்த 3 வயது குழந்தை கையில் கிண்ணத்தை கொடுத்து, அதனை கண்ணீரால் நிரப்புமாறு தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள யூலின் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இரவு உணவு தயாரித்தபோது, தந்தை தனது மகள் ஜியாஜியாவை சாப்பாட்டு மேஜைக்கு அழைத்தார். ஆனால் டிவி பார்ப்பதில் மூழ்கியிருந்ததால் அவள் பதிலளிக்கவில்லை.
விரக்தியடைந்த அவர் தொலைக்காட்சியை ஆஃப் செய்தார். இதனால் ஜியாஜியா அழத் தொடங்கினாள்.
இதைக்கண்ட ஜியாஜியா தந்தை ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்து, இந்த கிண்ணத்தை உன் கண்ணீரால் நிரப்பியவுடன் நீ டிவி பார்க்க மீண்டும் தொடங்கலாம் என்று கூறி உள்ளார்.
ஜியாஜியா தனது கண்களுக்கு கீழே கிண்ணத்தை வைத்து கண்ணீரை சேகரிக்க முயற்சி செய்தார். பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.
இந்த வீடியோ ஜியாஜியா அம்மா பகிர்ந்துள்ளார். பின்னர் ஜியாஜியா தந்தை அவளை சிரிக்கச்சொல்லி போட்டோ எடுத்தார். பின் சிரிக்கும் புகைப்படத்தையும் அழும் புகைப்படத்தையும் அவளிடம் காண்பித்தது வேடிக்கையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நிமிடங்களுக்கு பின் பெற்றோர் குழந்தையை சமாதானப்படுத்தினாலும் அவர்களின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.