மைக்ரோசாப்ட் குளறுபடி.. ரூ.75,000 கோடியை இழந்த Crowdstrike நிறுவனம்
- போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள் உடபட பல்வேறு தொழில்கள் முடங்கின
- பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், வங்கிகள், பங்கு சந்தைகள் உள்பட பல்வேறு முக்கிய அத்தியாவசிய சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்டிரைக்' என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று நடந்த சென்சார் மென்பொருள் அப்டேட்டில் குளறுபடி ஏற்பட்டதால் மைக்ரோசாப்ட் சர்வர்கள் முடங்கின. இந்த சர்வர் முடக்கத்தால் உலகம் முழுவதும் கணினி மற்றும் மடி கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி பல்வேறு சேவைகள் முடங்கியது.
பாதிப்புகள் ஓரளவு சரிசெய்யப்பட்ட நிலையில்பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.மைக்ரோசாப்ட் பங்குகள் 0.74 சதவீதம் சரிந்துள்ள்ள நிலையில் Crowdstrike பங்குகள் 11.10 சதவீதம் வரையில் சரிந்துள்ளன. இந்த பாதிப்புகளால் Crowdstrike நிறுவனம் 9 பில்லியன் டாலர்கள் [சுமார் ரூ.75,350 கோடி] சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.