உலகம்

மலாவி, மொசாம்பிக்கை கடுமையாக தாக்கிய பிரெடி புயல்- 100க்கும் மேற்பட்டோர் பலி

Published On 2023-03-14 13:11 GMT   |   Update On 2023-03-14 13:11 GMT
  • பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவுகள் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
  • இந்த மாதம் மட்டும் இரண்டு முறை பிரெடி புயல் கரை கடந்துள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் கரையோரத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் பிரெடி புயல் உருவானது. இதுவரை இல்லாத அளவில் மிக நீண்டகால வெப்பமண்டல புயலாக கருதப்பட்ட இந்த புயல் பிப்ரவரி 21ல் மடகாஸ்கர் வழியாகவும், பின்னர் இந்திய பெருங்கடல் முழுவதும் பரவி பிப்ரவரி 24ம் தேதி மொசாம்பிக்கிலும் கரைகடந்தது. இதனால் அங்கு பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவுகள் ஏற்பட்டன.

இந்த பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குள் மொசாம்பிக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பிரெடி புயல் தாக்கியது. அண்டை நாடான மாலாவியையும் கடுமையாக தாக்கியது. இந்த மாதம் மட்டும் இரண்டு முறை பிரெடி புயல் கரை கடந்துள்ளது.

இரவு நேரம் புயல் கரை கடந்ததால் மலாவியில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த 99 பேர் உயிரிழந்தனர். 134 பேர் காயமடைந்தனர். 16 பேரை காணவில்லை. மொசாம்பிக்கில் 10 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை விவகாரத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News