இஸ்ரேல் - ஈரான் கைகோர்த்த வரலாறு தெரியுமா?.. எதிரும் புதிரும் இணைந்தது ஏன்? - பிரிந்தது எப்படி?
- 1948 உருவான இஸ்ரேலை நாடாக அங்கீகரித்த 2 வது இஸ்லாமிய தேசமும் ஈரான்தான்.
- 1980 இல் ஈராக்குக்கு எதிரான போரின்போது அமெரிக்கா சார்பில் இஸ்ரேல் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கிவந்தது.
இரு துருவங்கள்
பாலஸ்தீனம் மற்றும் லெபனான் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று எதிரெதிர் துருவங்களாக உள்ள ஈரானும் இஸ்ரேலும் கடந்த காலங்களில் கைகோர்த்து செயல்பட்டிருக்கின்றன. தங்கள் இருவருக்கும் பொதுவான எதிரியாக இருக்கும் ஈராக் நாட்டை எதிர்கொள்ள 1960 களில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நட்புறவுடன் ஒன்றிணைத்துச் செயல்பட்ட வரலாறும் உண்டு.
எதிரி ஈராக்
1948 உருவான இஸ்ரேலை நாடாக அங்கீகரித்த 2 வது இஸ்லாமிய தேசமும் ஈரான்தான். முதலாவதாகத் துருக்கி இஸ்ரேலை அங்கீகரித்திருந்தது. 1950 களில் தெற்காசியாவிலே அதிக யூதர்கள் வசிக்கும் நாடாகவும் ஈரான் இருந்தது. மற்றைய இஸ்லாமிய நாடுகளுடன் கிடைக்காத உறவு ஈரானுடன் கிடைத்ததால் அதன் எண்ணெய் வளங்களை இஸ்ரேல் அதிகம் சார்ந்திருந்தது. ஈராக்கின் இஸ்லாமிய அடிப்படைவாத அரசை அச்சுறுத்தலாக இஸ்ரேல் பார்த்து வந்த நிலையில் ஷா முகமது ரெசா பஃலவி [Shah Mohammad Reza Pahlavi] தலைமையிலான ஈரான் ஈராக்கின் பகுதிகள் மீது கண் வைத்திருந்தது.
எனவே ஈரான், ஈராக், அமெரிக்கா ஆகிய மூன்று நாடு உளவு அமைப்புகளும் இணைந்து ஈராக் நாட்டினுள் அந்நாட்டினால் ஒடுக்கப்பட்ட குர்திய இனத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை ஊடுருவச் செய்தது. இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்பும், ஈரானின் சவாக் [SAVAK] உளவு அமைப்பும் ரகசிய பரிமாறிக்கொண்டன.
புரட்சி
தொடர்ந்து ராணுவ ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் இஸ்ரேல் ஈரான் உறவு தொடர்ந்த நிலையில் 1979 இல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியால் பஃலவியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டு அயத்துல்லா காமெனி அதிகாரத்துக்கு வந்தார்.
இதன்பின்னர் இஸ்லாமிய கட்டுப்பாடுகளால் ஈரான் தலைகீழாக மாறியது. ஆனாலும் 1980 இல் ஈராக்குக்கு எதிரான போரின்போது அமெரிக்கா சார்பில் இஸ்ரேல் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கிவந்தது.
குட்டிச் சாத்தான்
அனால் 1990 தொடங்கிய கல்ஃப் யுத்தத்தின் பின்னர் பின்னர் ஈராக் பிரச்சனை சற்று சுமூகமான பின்னர் பால்ஸ்தீன விவகாரம் உள்ளிட்டவற்றால் ஈரான் இஸ்ரேலை எதிரியாக பாவிக்கத் தொடங்கியது. இஸ்ரேல் குட்டிச் சாத்தான் என்றும் அமெரிக்கா பெரிய சாத்தான் என்று வர்ணிக்கும் அளவுக்கு மேற்கு நாடுகளுடனான ஈரானின் பகைமை வளர்ந்தது.