உலகம்
நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு 2024- வாணவேடிக்கைகளுடன் மக்கள் கொண்டாட்டம்
- கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருடத்தின் ஆங்கில புத்தாண்டு பிறந்தது.
- நியூசிலாந்ததில் புத்தாண்டு களைகட்டி வருகிறது.
நியூசிலாந்தில், இந்திய நேரப்படி சரியாக இன்று மாலை 4.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது.
உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருட ஆங்கில புத்தாண்டு பிறந்தது.
இந்நிலையில், வாணவேடிக்கையுடன் நியூசிலாந்து மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மேலும், பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டி, ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதனால், நியூசிலாந்ததில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.