உலகம்

ஐரோப்பிய யூனியனின் முக்கிய பதவிகள்: தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியது

Published On 2024-06-18 15:49 GMT   |   Update On 2024-06-18 15:49 GMT
  • உர்சுலா வொன் டென் லெயன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
  • இத்தாலி பிரதமர் மெலோனியின் ஈசிஆர் உர்சுலாவிற்கு ஆதரவு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனின் முக்கியமான பதவிக்கு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தை ஐரோப்பிய தலைவர்களிடம் நடைபெற்று வருகிறது.

தற்போது ஐரோப்பிய யூனியனின் தலைவராக இருக்கும் உர்சுலா வொன் டென் லெயன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருசெல்ஸில் நடைபெற்ற முதல்நாள் கூட்டத்தில் அதற்கான ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை ஒன்றிரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் தேர்தலில் உர்சுலாவின் ஐரோப்பியன் மக்கள் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் வலதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. ஜெர்மனியின் ஏஃப்டி, இத்தாலியின் ஃஎப்டிஎல், பிரான்சின் ஆர்என் கட்சிகள் செயல்பாடுகள் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளன.

இத்தாலி பிரதமர் மெலோனியின் ஈசிஆர் உர்சுலாவிற்கு ஆதரவு கொடுக்கும் என முன்னதாகவே செய்திகள் வெளியானது.

போர்ச்சுக்கலின் ஆண்டனியோ கோஸ்டா ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பதவியை எதிர்பார்த்துள்ளார்.

மால்டாவின் ராபர்ட்டா மெட்சோலா ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் பதவியை எதிர்பார்த்துள்ளார்.

எஸ்டோனியாவின் கஜா கலலாஸ் வெளியறவுததுறை மற்றும் பாதுகாப்பு கொள்கையின் உயர் பிரதிநிதி பதவியை எதிர்பார்த்துள்ளார்.

Tags:    

Similar News