உலகம்

புதிய வரலாறு படைத்த பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்

Published On 2024-07-14 12:33 GMT   |   Update On 2024-07-14 12:33 GMT
  • மிஸ்டர் பீஸ்ட் சேனலை தொடங்கிய ஜிம்மி டொனால்ட்சன் சுமார் 800 வீடியோக்களை மட்டுமே அதில் பதிவிட்டு இருந்தார்.
  • மிஸ்டர் பீஸ்ட் பக்கத்தை பயனர்கள் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

உலக அளவில், மக்களின் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு சமூக வலைதளமாக யூடியூப் விளங்குகிறது. நமக்கு ஏதாவது ஒன்று தெரியவில்லை என்று நினைத்தால் அதற்கு நிச்சயமாக யூடியூப்பில் விடை கிடைக்கும்.

யூடியூபில் சேனல் தொடங்குவது எளிது என்பதால், இணைய பயனர்கள் பலரும் தங்களுக்கென்று ஒரு சேனலை தொடங்கி அதில், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதில் அமெரிக்காவை சேர்ந்த மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் பக்கம் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் இந்த சேனலை நடத்தி வருகிறார்.

பல்வேறு சாகசங்கள் செய்து புகழ் பெற்ற இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடியூப்பில் அதிக சந்தாதாரர்கள் என்ற இந்தியாவை சேர்ந்த இசை நிறுவனமான டி-சீரிசை மிஞ்சினர்.

2006-ம் ஆண்டு யூடியூபில் இணைந்த டி-சீரிஸ் நிறுவனத்திற்கு 26.6 கோடி சந்தாதாரர்கள் இருந்த நிலையில் கடந்த மாதம் அதனை மிஞ்சி மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் பக்கம் முதலிடத்தை பிடித்தது.

மிஸ்டர் பீஸ்ட் சேனலை தொடங்கிய ஜிம்மி டொனால்ட்சன் சுமார் 800 வீடியோக்களை மட்டுமே அதில் பதிவிட்டு இருந்தார்.

ஆனால் ஒவ்வொரு வீடியோவும் பல லட்சம் பார்வைகளை பெற்று புதிய உச்சம் தொட்டது. இந்நிலையில் தற்போது மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் பக்கம் 30 கோடி சந்தாதாரர்களை அடைந்த முதல் யூடியூபர் என்ற வரலாற்றை படைத்துள்ளது.

இதற்காக மிஸ்டர் பீஸ்ட் பக்கத்தை பயனர்கள் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News