உலகம்
முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
- இண்டியானாவில் உள்ள மைக் பென்ஸ் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- ஏற்கனவே அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடுகள் மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் கடந்த மாதம் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை ஆகும். இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
ஏற்கனவே, கடந்த 22-ம் தேதி டேலாவேரில் உள்ள அதிபர் ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.