உலகம்

ஐக்கிய நாடுகள் சபை

ஐ.நா. சபையில் ரஷியாவிற்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

Published On 2022-08-25 21:33 GMT   |   Update On 2022-08-25 21:33 GMT
  • ஐ.நா.சபையில் ரஷியாவிற்கு எதிராக நடந்த ஓட்டெடுப்புகளை இந்தியா புறக்கணித்தே வந்தது.
  • முதன்முறையாக இந்தியா ரஷியாவிற்கு எதிராக ஓட்டளித்தது.

ஐ.நா:

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்த பிறகு, ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக இதுவரை நடந்த ஓட்டெடுப்புகளை இந்தியா புறக்கணித்தே வந்தது.

இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி ஐக்கிய நாடுகள் சபையில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்ற அழைப்பு விடுக்க வேண்டி ஓட்டெடுப்பு கொண்டு வரப்பட்டது. இதில் வழக்கமாக இந்தியா புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம் கூறுகையில், ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றுவதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. அதற்கு நாங்கள் ஆதரவு மட்டுமே அளித்தோம். அவர் ஏற்கனவே இருமுறை உரையாற்றியுள்ளார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News