உலகம்

ரஷிய அதிபர் புதினுடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்

எரிபொருள் இறக்குமதி- உக்ரைனை ஏமாற்றிய பிரான்ஸ்

Published On 2022-06-15 07:53 GMT   |   Update On 2022-06-15 07:53 GMT
  • இந்த ஆண்டுக்குள் ரஷியாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
  • கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் ரூ.7200 கோடி மதிப்பிலான எரிபொருட்களை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாரிஸ்:

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான எரிபொருளுக்கு ரஷியாவையே நம்பி இருக்க வேண்டியதாக உள்ளது. ஆனாலும் இந்த ஆண்டுக்குள் ரஷியாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.

இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பிரான்ஸ், ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் ரூ.7200 கோடி மதிப்பிலான எரிபொருட்களை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உக்ரைனை பிரான்ஸ் ஏமாற்றிவிட்டது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News