உலகம்

தேர்தல் ஆணையர்களுடன் ஜெர்மனி வெளியுறவு மந்திரி 

இந்திய தலைமை தேர்தல் ஆணையருடன், ஜெர்மனி வெளியுறவு மந்திரி சந்திப்பு

Published On 2022-12-07 05:10 GMT   |   Update On 2022-12-07 05:10 GMT
  • இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார்.
  • தேர்தல் ஆணையத்தன் செயல்பாட்டிற்கு ஜெர்மனி மந்திரி பாராட்டு.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி அன்னாலெனா பேர்பாக் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள்அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோரை சந்தித்த அன்னாலெனா தலைமையிலான ஜெர்மன் பிரதிநிதிகள் குழு, இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தது.

பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்காளர்கள் எளிதில் வாக்களிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கப்படும் விரிவான பயிற்சி முறை உள்ளிட்டவை குறித்து ராஜீவ் குமார் அப்போது விளக்கம் அளித்தார். தேர்தல் நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பங்கேற்பையும் இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

போலியான சமூக ஊடக தாக்கம், பெரும்பாலான தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு ஒரு சவாலாக வளர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக செயல்பாட்டை ஜெர்மனி வெளியுறவு மந்திரி பாராட்டினார். டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News