உலகம்

கோப்புப்படம்

மேலும் இரண்டு பிணைக்கைதிகளை திரும்பப்பெற இஸ்ரேல் மறுத்துவிட்டது: ஹமாஸ் சொல்கிறது

Published On 2023-10-22 01:53 GMT   |   Update On 2023-10-22 01:53 GMT
  • பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரண்டு அமெரிக்க பெண்களை ஹமாஸ் விடுவித்தது
  • இந்த நடவடிக்கையால் காசா மீதான தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படாது என இஸ்ரேல் பதில்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். சிலரை கொலை செய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

அதன்பின் இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே பிணைக்கைதிகள்- கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ள கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும், மறுபக்கம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளில் தாய் மற்றும் மகள் என இரண்டு அமெரிக்கர்களை ஹமாஸ் விடுவித்தது.

இந்த நிலையில் மேலும் இரண்டு பேரை அதன்அடிப்படையில் விடுவிக்க தயாராக இருந்தோம். ஆனால், இஸ்ரேல் அவர்களை பெற மறுத்துவிட்டது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், ஹமாஸின் பொய் பிரசாரத்தை நாங்கள் குறிப்பிடமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போன மக்களை மீட்க அனைத்து வழிகளிலும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News