93 மணிநேரத்திற்கும் மேலாக சமைத்து உலக சாதனை படைத்த பெண்
- சமையலறையில் 100 பானைகளுக்கு மேல் உணவை சமைத்த ஹில்டா பாசி தனது ஓய்வு இடைவேளைகளில் கூடுதல் நிமிடங்களை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.
- சமையல் நேரத்தில் 7 மணி நேரம் கழிக்கப்பட்டு 93 மணி நேரம் 11 நிமிடங்கள் இடைவிடாமல் சமைத்ததாக அறிவிக்கப்பட்டது.
நீண்ட நேரம் சமையல் செய்து உலக சாதனை படைத்து அசத்தி உள்ளார் நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண். அவரது பெயர் ஹில்டா பாசி. 26 வயதான இவர் சுமார் 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைக்க முயன்றுள்ளார்.
மே 11-ந்தேதி தொடங்கிய இவரது சமையல் பயணம் மே 15-ந்தேதி வரை தொடர்ந்துள்ளது. சமையலறையில் 100 பானைகளுக்கு மேல் உணவை சமைத்த இவர் தனது ஓய்வு இடைவேளைகளில் கூடுதல் நிமிடங்களை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் சமையல் நேரத்தில் 7 மணி நேரம் கழிக்கப்பட்டு 93 மணி நேரம் 11 நிமிடங்கள் இடைவிடாமல் சமைத்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்திய சமையல் கலைஞரான லதா டோண்டன் என்பவர் 87 மணி நேரம் 45 நிமிடங்களில் இந்த சாதனை படைத்திருந்தார். அதனை ஹில்டா பாசி தற்போது முறியடித்துள்ளார். இதுகுறித்து ஹில்டா பாசி கூறுகையில், நைஜீரிய உணவு வகைகளை பிரபலபடுத்தும் வகையில் இந்த சாதனையை முயற்சி செய்ததாக அவர் கூறினார்.