உலகம்

ஓரினச்சேர்க்கையர்கள்.. போப் ஆண்டவர் சொன்ன கெட்ட வார்த்தை.. வெடித்தது சர்ச்சை

Published On 2024-06-12 03:17 GMT   |   Update On 2024-06-12 06:08 GMT
  • ஆங்கிலத்தில் Fagotness என்று பொருள்படும் இந்த வார்த்தை இயற்கையை மீறிய மயக்கம் என்ற பொருளில் ஓரின சேர்க்கையாளர்களை குறிக்கிறது.
  • இதற்கு முன்னரும் இந்த வசைமொழியை போப் பயன்படுத்தி அது சர்ச்சையாகி அதற்கு கடந்த மாதம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ், ஓரினச்சேர்கையாளர்கள் குறித்த கடுமையான  வசைமொழியை பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள புனித நகரமான வாட்டிகன் திருச்சபையில் கடந்த மே 20 ஆம் தேதி பிஷப்களுடன் நடந்த சந்திப்பின்போது ஓரினச்சேர்க்கையாளர்களை குறிக்கும் இத்தாலிய வசை மொழியான புரோசியாஜினே [Frociaggine] என்ற வார்த்தையை போப் பிரான்சிஸ் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆங்கிலத்தில் Fagotness என்று பொருள்படும் இந்த வார்த்தை இயற்கையை மீறிய மயக்கம் என்ற பொருளில் ஓரின சேர்க்கையாளர்களை குறிக்கிறது. பிஷப்களிடம் போப் உரையாடும்போது, வாட்டிகனில் Frociaggine காற்று வீசி வருகிறது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர்களை செமினரிக்குள் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஓரினச்சேர்க்கையாளர்களை செமினரியங்களாக அனுமதிக்கலாமா என்ற விவாதத்தின்போது போப் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இத்தாலிய ஊடகங்களில் இந்த விவகாரம் பேசுபொருள்ளாகியுள்ளது . இதற்கு முன்னரும் இந்த வசைமொழியை போப் பயன்படுத்தி அது சர்ச்சையாகி அதற்கு கடந்த மாதம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்நிலையில்தான் மீண்டும் அவர் இந்த வசைமொழியை பயன்படுத்தியுள்ளார்.

87 வயதாகும் பிரான்சிஸ் கடந்த 11 ஆண்டு காலமாக திருத்தந்தையாக உள்ள நிலையில் LGBT சமூகத்துக்கு எதிரான பார்வையை கொண்டுள்ளார் என்று விமர்சிக்கப்படுகிறார். இதற்கிடையில் பிறப்பால் அர்ஜென்டைன் நாட்டவரான போப் பிரான்சிஸ், இத்தாலிய வசைமொழியின் உள்ளர்த்தம் தெரியாது பேசியுள்ளார் என்றும் கூறப்படுவது ஒப்புநோக்கத்தக்கது.  

Tags:    

Similar News