உலகம்

இந்திய முஸ்லிம்கள் பற்றி பேசிய ஈரான் சுப்ரீம் தலைவர்: இந்தியா கொடுத்த பதிலடி

Published On 2024-09-17 02:47 GMT   |   Update On 2024-09-17 02:47 GMT
  • இந்தியாவும் ஈரானும் வலுவான இருதரப்பு உறவுகளை கொண்டுள்ளது.
  • மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தெஹ்ரானில் நடைபெற்ற ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்தியாவில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாகக் கூறிய ஈரானின் சுப்ரீம் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கருத்துக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்தியா, காசா, மியான்மர் உள்ளிட்ட எந்த ஒரு இடத்திலும் ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் துன்பங்களை நாம் கவனிக்காமல் இருந்தால் நம்மை முஸ்லிம்களாக கருத முடியாது என்று நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் ஈரானிய தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. கமேனி கூறிய கருத்துக்களை நிராகரித்து, தவறான தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.

சிறுபான்மையினர் குறித்து விமர்சனக் கருத்துக்களை வெளியிடும் நாடுகள், இதனை சொல்வதற்கு முன் தங்கள் சொந்த மனித உரிமைகள் பதிவுகளை முதலில் ஆராயுமாறு அமைச்சகம் மேலும் அறிவுறுத்தியது.

இந்தியாவும் ஈரானும் வலுவான இருதரப்பு உறவுகளை கொண்டுள்ளது. சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் எதுவும் இல்லை.

முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் உத்தியோகபூர்வ விழாவில் கலந்து கொள்வதற்காக மே மாதம் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஈரானுக்கு பயணம் செய்தார்.

ஜூலை மாதம் கூட, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தெஹ்ரானில் நடைபெற்ற ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News