உலகம் (World)

இறக்குமதிக்கு அதிக வரி விதிக்குது இந்தியா.. நா மட்டும் மறுபடியும் ஆட்சிக்கு வந்தேன்னா.. டிரம்ப்

Published On 2024-10-11 10:49 GMT   |   Update On 2024-10-11 10:49 GMT
  • நவம்பர் 5 நடக்க உள்ள அமரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் அதற்கான பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
  • நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கும் இருந்தும் அவர்கள் அதிக இறக்குமதி வரியை விதிக்கின்றனர்.

இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா சீனாவை விட அதிக வரிவிதிப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 5 நடக்க உள்ள அமரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் அதற்கான பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.

அதன்படி டெட்ராய்ட் நகருக்கு பிரசாரம் சென்ற டிரம்ப் பேசியதாவது, நமது நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்குச் சீனா 200 சதவீதம் வரை வரி விதிக்கிறது, பிரேசிலும் அதிக வரி விதிக்கிறது.

இந்தியா, சீனாவை விட அதிக வரி விதிக்கிறது, அதுவும் சிரித்துக்கொண்டே.. இந்தியா- அமரிக்கா இடையே சிறந்த உறவு இருந்தும், அதுவும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கும் இருந்தும் அவர்கள் அதிக இறக்குமதி வரியை விதிக்கின்றனர்.

நான் தேர்தலில் வென்றால் [அமெரிக்க பொருட்களுக்கு] அதிக இறக்குமதி வரி விதிக்கும் அதுபோன்ற நாடுகளுக்கு நிகராக அந்நாட்டிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை உயர்த்துவேன் என்று பேசியுள்ளார்

Tags:    

Similar News