உலகம்

நீர்யானைக்கு பிளாஸ்டிக் கொடுத்த நபர்.. வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டனம் - வீடியோ

Published On 2024-07-11 02:45 GMT   |   Update On 2024-07-11 02:45 GMT
  • எக்ஸ் தளத்தில் வைரலான வீடியோ இரண்டு மில்லியன் பார்வைகளையும் 14,000 விருப்பங்களையும் குவித்துள்ளது.
  • பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களில் சில, விலங்குகள் மீது மனிதர்கள் வைத்துள்ள பாசத்தை காட்டும். ஆனால் தற்போது வைரலாகும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் வீடியோவில், நீர்யானையின் வாயில் பிளாஸ்டிக் பையை ஒருவர் திணிப்பது பார்ப்பவர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்குகிறது. இச்சம்பவம் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள வனவிலங்கு பூங்காவில் நடந்துள்ளது.

வீடியோ காட்சிகளின் படி, பூங்காவை காரில் சென்று சுற்றி பார்க்கும் பயணிகளில் ஒருவர் நீர் யானைக்கு கேரட்டை கொடுக்க முன்வருகிறார். இதனால் நீர் யானையோ வாயை திறக்க மற்றொரு சுற்றுலா பயணி அதன் வாயில் பிளாஸ்டிக் பையை திணிக்கிறார். இதையடுத்து அந்த நீர்யானை பிளாஸ்டிக் பையை மெல்லுகிறது.

எக்ஸ் தளத்தில் வைரலான வீடியோ இரண்டு மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், "மனிதர்கள் அருவருப்பானவர்கள் மற்றும் பூங்காவில் விலங்குகளுக்கு உணவளிக்க யார் அனுமதிக்கிறார்கள்" என்றார். மற்றொருவர், "இதனால் அனைத்து விலங்குகளும் அழிந்து வருகின்றன" என்றார்.

இதற்கிடையே வீடியோ வைரலானதை அடுத்து, அந்த நபர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

பிளாஸ்டிக் பொருட்களால் உணவுகள் வீசப்படுகிறது. இந்த உணவை தேடி வரும் விலங்குகள் அதை உட்கொள்ளுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News