உலகம்

ஐரோப்பிய ஒன்றிய தூதருடன், ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் அல் பகேரி கனி

அணுசக்தி பேச்சுவார்த்தையின் கடைசி முயற்சி- வியன்னாவுக்கு செல்லும் 3 நாட்டு தூதர்கள்

Published On 2022-08-03 16:16 GMT   |   Update On 2022-08-03 16:16 GMT
  • கட்டுப்பாடுகளுக்கு ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைய அமெரிக்கா விருப்பம்
  • ஒப்பந்தத்தை மீட்டெடுப்பது தொடர்பான வரைவு திட்டம் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது

தெஹ்ரான்:

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடைபெற்றுவருகிறது. இதில், அமெரிக்கா, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை சிலவற்றை நீக்குவதாகவும் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஈரான் ஆகிய நாடுகள் வியன்னாவிற்கு தூதர்களை அனுப்புவதாகக் கூறி உள்ளன. இது, உலக வல்லரசு நாடுகளுடனான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தயை புதுப்பிக்கும் கடைசி முயற்சியாக இருக்கும் என தெரிகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சுவார்த்தையின்போது மற்ற நாடுகள் பங்கேற்குமா? என்பது உடனடியாகத் தெரியவில்லை.

பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதர் என்ரிக் மோரா இதுபற்றி கூறும்போது, ஒப்பந்தத்தை மீட்டெடுப்பது தொடர்பான வரைவு திட்டம் குறித்து இந்த பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்றார். அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அலி பகேரி கனியை ஆஸ்திரிய தலைநகருக்கு அனுப்புவதாக ஈரான் கூறி உள்ளது.

Tags:    

Similar News