உலகம்

லெபனான் - சிரியா இணைப்பு சாலையை தாக்கி அழித்த இஸ்ரேல்.. எல்லையை துண்டித்ததால் மக்கள் நிர்கதி

Published On 2024-10-05 02:20 GMT   |   Update On 2024-10-05 02:20 GMT
  • கடந்த 10 நாட்களில் 3 லட்சம் லெபனானியர்கள் அண்டை நாடான சிரியாவுக்கு படையெடுத்துள்ளனர்.
  • லெபனான் - சிரியாவை இணைக்கும் மஸ்னா எல்லை பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

லெபனான் நிலவரம்  

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 2000 துக்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலைக்கு பிறகும் இஸ்ரேல் அவ்வமைப்பை முற்றிலுமாக அளிக்க தீவிரம் காட்டி வருகிறது.

இதனால் நடக்கும் தாக்குதல்களில் லெபனான் மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இதுவரை 12 லட்சம் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இதில் கடந்த 10 நாட்களில் 3 லட்சம் பேர் அண்டை நாடான சிரியாவுக்கு படையெடுத்துள்ளனர்.

 

 மஸ்னா எல்லை

இந்நிலையில் லெபனான் - சிரியாவை இணைக்கும் மஸ்னா எல்லை பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் எல்லையில் அமைந்துள்ள சாலைகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. எனவே லெபனானில் இருந்து சிரியாவுக்குள் செல்ல வழியில்லாமல் பொதுமக்கள் தவித்து வருகிறனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள மஸ்னா எல்லை, சிரியா தலைநகர் டமாஸ்காஸ் -கு செல்லும் வழியாக உள்ளது. இந்த வழியாகவே ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை கடத்துவதால் அங்கு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது. 

Tags:    

Similar News