ஈரான் பதிலடி தாக்குதலுக்கு தயாராகிறது?
- ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவுகளை வழங்கி உள்ளார்.
- மூத்த ராணுவ அதிகாரிகளை கொன்றாலோ நாம் உக்கிரமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குலுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவுகளை வழங்கி உள்ளார்.
நாமும் இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு தயாராக இருக்க வேண்டும். நம் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி டிரோன்கள் சேமித்து வைத்திருக்கும் இடங்களை சேதப்படுத்தினால் போரை தொடங்க வேண்டாம். அதேவேளையில் எண்ணெய் கிடங்குகள், எரிசக்திக்கான கட்டமைப்புகள், அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினாலோ அல்லது மூத்த ராணுவ அதிகாரிகளை கொன்றாலோ நாம் உக்கிரமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலின் ஏவுகணைகளின் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் ராணுவம் எக்ஸ் வலைதள பக்கத்தில், ஏவுகணைகளின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளது.