உலகம்
LIVE

இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

Published On 2023-10-08 04:14 GMT   |   Update On 2023-11-05 07:52 GMT
  • இஸ்ரேல் படைகள் காசாவில் ஹமாஸ் அமைப்பினருடன் சண்டையிட்டு வருகின்றன.
  • ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இருதரப்பிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் கடந்த இரு தினங்களில் வடக்கு எல்லை மற்றும் தெற்கில் சுற்றுப்பயணம் செய்தார்.

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேலியப் படைகள் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று தெரிவித்தார்.

2023-11-05 07:52 GMT

மக்கள் வசிக்கும் பகுதி, பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றாலும், தொடக்கம் முதலே இஸ்ரேல் போர் நெறிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது என பாலஸ்தீனம் குற்றம்சாட்டி உள்ளது.

2023-11-05 06:39 GMT

இஸ்ரேலியப் படைகள் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் தெரிவித்தார்.

2023-11-05 05:44 GMT

ஜபாலியா அகதிகள் முகாமில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த ஒரு பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசின. இதில் 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

2023-11-04 13:05 GMT

பாலஸ்தீனியர்கள் தஞ்சம் புகுந்திருந்த ஐ.நா. பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

2023-11-04 07:50 GMT

இந்தோனேசிய அதிபர், 51 டன் எடைகொண்டு மனிதாபிமான உதவிப் பொருட்களை காசாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

2023-11-04 07:49 GMT

காசா முனைக்கு 65 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான உதவிகள் வழங்க இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

2023-11-04 07:49 GMT

தெற்கு இஸ்ரேல் நகரான எய்லாட்டில் ராக்கெட் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்தில் ஓடினர்.

2023-11-04 07:47 GMT

வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள 730-க்கும் மேற்பட்டோர் ராபா எல்லை வழியாக காசாவில் இருந்து வெளியேற தயாராகி வருகிறார்கள்.

2023-11-04 07:46 GMT

அல் ஷிபா மருத்துவமனைக்கு வெளியில் ஆம்புலன்ஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல கொரூரமானது. மோதல் நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

2023-11-04 03:31 GMT

கப்பலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த இஸ்ரேலின் எஃப்-35 விமானம், நடுவானில் வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News