உலகம்

போர் நிறுத்தம் தொடங்கிய போதும் லெபனான் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

Published On 2024-11-28 16:17 GMT   |   Update On 2024-11-28 16:17 GMT
  • போர் நிறுத்தம் அறிவித்த ஒரு நாளுக்கு பிறகு இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
  • இந்த தாக்குதலில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ராக்கெட் சேமிப்பு கிடங்கு ஒன்றில் ஹிஸ்புல்லா நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியதால் தெற்கு லெபனான் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் அறிவித்த ஒரு நாளுக்கு பிறகு இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், அவர்கள் எந்த தகவலும் வழங்கவில்லை என்று கூறியது. இது குறித்து லெபனான் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் இந்த தாக்குதலில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இரண்டு மாத போர்நிறுத்த காலத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் லிட்டானி ஆற்றின் வடக்கே திரும்பப் பெற வேண்டும் மற்றும் இஸ்ரேலிய படைகள் தங்கள் பக்கம் திரும்ப வேண்டும். எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் லெபனான் துருப்புக்கள் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் ரோந்து செல்வர்.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போர் நிறுத்தத்தின் இரண்டாவது நாளில், எல்லைக்கு அருகில் உள்ள மார்கபாவில் பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லெபனான் செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

Tags:    

Similar News