உலகம்

வட காசாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற வேண்டும் - இஸ்ரேல் எச்சரிக்கை

Published On 2023-10-13 04:11 GMT   |   Update On 2023-10-13 04:21 GMT
  • ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி வருகிறது.
  • காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேறவும் எச்சரித்துள்ளது.

டெல் அவிவ்:

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 6-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பள்ளிகள் உள்பட அனைத்து இடங்களில் உள்ள பாலஸ்தீனியர்களை உடனே வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News