உலகம்

ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீடு தகர்ப்பு - இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவிப்பு

Published On 2023-10-08 07:07 GMT   |   Update On 2023-10-08 07:07 GMT
  • காசாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துள்ளது.
  • மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நேற்று இரவு முழுவதும் காசா நகரம் இருளில் மூழ்கியது.

ஜெருசலேம்:

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 300 ஆகவும், காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி 230 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.

காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதால் அங்குள்ள பொதுமக்களை வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் கேட்டுக் கொண்டார்.

காசாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நேற்று இரவு முழுவதும் காசா நகரம் இருளில் மூழ்கியது.

இந்நிலையில், காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை இஸ்ரேல் விமானப்படை தாக்கி அழித்துள்ளது. இந்த வீடு ஹமாஸ் அமைப்பின் ஆயுத கட்டமைப்பாக செயல்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News