உலகம்

காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலி

Published On 2024-07-27 12:55 GMT   |   Update On 2024-07-27 12:55 GMT
  • மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
  • இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் பலியாகினர்.

காசா:

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் கடந்த 9 மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நடந்துவருகிறது. இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல் அரங்கேறியது.

அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்டஇஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்தை தோல்வி முகத்தில் உள்ளன. இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News