மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தடுக்கிறது - இஸ்ரேல் ராணுவம் குற்றச்சாட்டு
- போரால் சாமானிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
- எச்சரிக்கையை ஏற்று மக்கள் உடனடியாக வெளியேறி வருகிறார்கள் என்றார்.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 7-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தடுத்து வருகிறது என இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கூறுகையில், போரால் சாமானிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். எச்சரிக்கையை ஏற்று மக்கள் உடனடியாக வெளியேறி வருகிறார்கள். ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தடுப்பது வேதனை அளிக்கிறது. 120க்கும் அதிகமான சாமான்ய மக்களை பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.