உலகம்

துருக்கி கப்பலை கடத்த முயன்ற கும்பல்: இத்தாலி வீரர்கள் திறம்பட செயல்பட்டு முறியடிப்பு

Published On 2023-06-10 05:29 GMT   |   Update On 2023-06-10 06:06 GMT
  • கப்பலில் 22 பேர் இருந்துள்ளனர்
  • மீட்கப்பட்ட கப்பல் இத்தாலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது

துருக்கி சரக்கு கப்பல் ஒன்று பிரான்ஸ்க்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு கும்பல் ஆயுதங்களுடன் கப்பலுக்குள் நுழைந்தனர். கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 பேரை மிரட்டி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த இத்தாலி சிறப்புப்படையினர் ஆயுதக் கும்பலின் தாக்குதலை முறியடித்து, கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது கப்பல் நப்லேஸ் துறைமுகத்திற்கு வெளியே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் கப்பலில் மறைந்து இருக்கும் நபர்களை போலீசார தேடிவருகின்றனர். சிலர் தப்பி ஓடிவிட்டனர்.

நப்லேஸ் பகுதியின் தெற்கு பகுதியில் இருக்கும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களில் சிலர் ஆயுதமேந்தி இந்த செயலில் ஈடுபட்டதாக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கப்பலை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதை இத்தாலி பாதுகாப்பு மந்திரி உறுதிப்படுத்தியுள்ளார்.

Similar News