குவைத் தீ விபத்து.. உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு
- உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் இன்று காலை இந்தியா வருகின்றன. உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை கொச்சி வழியாக தமிழ்நாட்டிற்கு எடுத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கரும்புகைகளுக்கு நடுவே டார்ச் லைட் அடித்து காப்பாற்றுமாறு தொழிலாளர்கள் கதறும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே தங்க வைக்க இட வசதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 190 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட கரும்புகை, கட்டடம் முழுவதையும் உட்புறமாக சூழ்ந்ததாக யாராலும் தப்பிக்க முடியவில்லை என தகவல்.
தரைதளத்தில் படிக்கட்டை ஒட்டிய பராமரிப்பு அறையில் விதிகளை மீறி 6க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், அது வெடித்ததே விபத்துக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.
குவைத் தீ விபத்தில் சிக்கி ஏற்கனவே 5 தமிழர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 2 தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவைத் தீ விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் நலம் விசாரித்த இந்திய இணை வெளியுறவுத்துறை மந்திரி கீர்த்தி வர்தன் சிங்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.