உலகம்
ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நயீம் காசிம் நியமனம்
- ஹமாசுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
- ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நயீம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெய்ரூட்:
இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பின் துணை பொதுச் செயலாளரான ஷேக் நயீம் காசிம் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
இதற்கிடையே லெபனானில் கடந்த செப்டம்பர் 23-ந்தேதி இஸ்ரேல் தொடங்கிய தாக்குதலில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1500-ஐ கடந்துள்ளது.