உலகம்
null
புதன் கிரகத்தில் கொட்டி கிடக்கும் வைரங்கள் - வெட்டி எடுக்க முடியுமா?
- அதிக வெப்பம் மிகுந்த கிரகமாக புதன் உள்ளது.
- புதன் கிரகத்திற்கு அடியில் வைர அடுக்குகள் 14 கி.மீ தடிமனில் உள்ளது.
நமது சூரியகுடும்பத்தின் முதலாவது கிரகம் புதன் ஆகும். சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதால் அதிக வெப்பம் மிகுந்த கிரகமாக உள்ளது.
இந்நிலையில், புதன் கிரகத்திற்குள் மிக அதிக அளவில் வைரம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
புதன் கிரகத்தின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பதாகவும், இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள்14 கி.மீ தடிமனில் இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், புதன் கோளில் உள்ள வைரத்தை சுலபமாக வெட்டி எடுக்க சாத்தியம் இல்லை என்று 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' என்ற அறிவியல் இதழில் தகவல் வெளியாகியுள்ளது