உலகம்

ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரையும் நசுக்கி அழிப்போம்: இஸ்ரேல் பிரதமர் பதிலடி

Published On 2023-10-12 08:54 GMT   |   Update On 2023-10-12 08:54 GMT
  • பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் மற்றும் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
  • ஹமாசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருக்கிறோம்.

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்து ஹமாஸ் கமாண்டர் மஹ்மத் அல் ஜஹார் வீடியோ வெளியிட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ஹமாசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருக்கிறோம். ஹமாஸ் அமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரையும் நசுக்கி அழிப்போம் என்றார்.

இதே போல இஸ்ரேல் பாதுகாப்பு துறை மந்திரி யோவ் கேலன்ட் கூறுகையில், நாங்கள் ஹமாஸ் அமைப்பை பூமியில் இருந்து துடைத்து எறிவோம் என்றார்.

இதற்கிடையே பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் மற்றும் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

அப்போது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் மற்றும் அட்டூழியங்களை பட்டியலிட்ட அவர் ஹமாஸ் அமைப்பை வேரறுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இஸ்ரேலுக்கு உலக தலைவர்களிடம் இருந்து கிடைத்த ஆதரவையும் அவர் விவரித்துள்ளார்.

Tags:    

Similar News