உலகம்
நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், ஹமாஸ் அமைப்பை அழிப்போம் - இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
- நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உரையாற்றினார்.
- அப்போது, நாங்கள் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிப்போம் என்றார்.
ஜெருசலேம்:
காசாவுக்குள் முதல் முறையாக இஸ்ரேல் தரைப்படை நேற்று நுழைந்தது. சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இது ஆரம்பம்தான். இந்தப் போரை இதுவரை இல்லாத அளவு வலிமையாக முடிப்போம்.
நாங்கள் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிப்போம். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பரந்த சர்வதேச ஆதரவு உள்ளது.
நமது எதிரிகள் இப்போதுதான் விலை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். என்ன நடக்கும் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது. ஆனால் இது ஆரம்பம் என்று நான் சொல்கிறேன்.
நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். யூத மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடூரங்களை ஒருபோதும் மறக்க மாட்டோம். வரம்பற்ற சக்தியைக் கொண்டு எங்கள் எதிரிகளை எதிர்த்து போராடுவோம் என தெரிவித்தார்.