உலகம்

கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க ஜப்பான் பிரதமர் விருப்பம் : வடகொரியா

Published On 2024-03-25 04:33 GMT   |   Update On 2024-03-25 11:49 GMT
  • வடகொரியா அடிக்கடி ஜப்பான் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தி வருகிறது.
  • கொரிய தீபகற்பம் விவகாரத்தில் வடகொரியா- அமெரிக்காவுக்கு ஆதரவாக ஜப்பான் இருந்து வருகிறது.

தென்கொரியா மற்றும் அமெரிக்காவு தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதும் வட கொரியா, இரு நாடுகளுக்கும் எதிராக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வடகொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.

இந்த விசயத்தில் தென்கொரியா- அமெரிக்காவுடன் ஜப்பான் இணைந்து வடகொரியாவை எதிர்த்து வருகிறது.

இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக, வட கொரியா அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.

ஒரு டி.வி. சேனலில் பேசும்போது ஜப்பான் பிரதமர் தனது விருப்பத்தை தெரிவித்ததாக கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அந்த டி.வி. பெயர் அவர் குறிப்பிடவில்லை.

கிம் யோ ஜாங்

மேலும், "இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுவது ஜப்பான் கையில் உள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கடத்தப்பட்ட கடந்த கால குற்றச்சாட்டை தீர்ப்பது தொடர்பான முயற்சியை கடைபிடித்தால், தனது பிரபலத்தை உயர்த்துவதற்காகவே பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற விமர்சனத்தை அவரால் தவிர்க்க முடியாது" என்றார்.

Tags:    

Similar News