கென்யாவில் அணை உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்: 40 பேர் பலி
- கென்யாவில் 2 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளிக்கூடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிரேட் ரிஃப்l; பள்ளத்தாக்கு மாகாணத்தில் அமைந்தள்ள பகுதி மாய் மஹியு. இங்கு ஒல்டு கிஜாப் என்ற அணை உள்ளது. இந்த அணி திடீரென்று உடைந்தது வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மரங்களை வேறோடு சாய்த்து இழுத்துச் சென்றது. கார்கள் அடித்து செல்லப்பட்டன.
அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் மத்தியில் இருந்து கென்யாவில் கனமழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்திருந்தது, கனமழை காரணமாக அணை நிரம்பியிருந்தது.
கடந்த சனிக்கிழமை கென்யாவின் முக்கியமான விமான நிலையம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. ரன்வே மூழ்கியதால் பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கென்யாவில் 2 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளிக்கூடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிய முகாம் அமைக்க கென்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கிழக்க ஆப்பிரிக்க நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. தான்சானியாவில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு 155 பேர் உயிரிழந்தனர். புருண்டியில் 2 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.