காசா போரில் முதல் வார நிலவரப்படி 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்- ஐ.நா தகவல்
- ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
- மக்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 7ம் தேதி முதல் தொடங்கியது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த போர் தாக்குதலால் மக்கள் தங்களின் வீடு, உடமைகளைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், காசாவில் மோதலின் முதல் ஏழு நாட்களில் இதுவுரை 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஐ.நாவின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலியட் டூமா கூறுகையில்," காசாவில் நடந்த போரின் முதல் ஏழு நாட்களில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மக்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.