உலகம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு இம்ரான் கான் விண்ணப்பம்

Published On 2024-08-20 01:44 GMT   |   Update On 2024-08-20 01:44 GMT
  • அக்டோபர் மாதம் வேந்தர் தேர்வு செய்யப்படுவார்.
  • இம்ரான் கான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்றனர்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பல்வேறு வழக்குளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார. சுமார் ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருக்கும் இம்ரான் கான், இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

"இம்ரான் கான் தனது குழுவிற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவு அளித்தார். விண்ணப்பத்தின் பரிசீலனை தற்போது நடைபெறுகிறது. இது ஒரு மரியாதைக்குரிய பதவியாகும். இம்ரான் கான் வேந்தராக தேர்வு செய்யப்பட்டால் அது சிறந்தது. அப்படி நடந்தால் முதல் ஆசிய நபர் ஆவார். இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல. ஆசியா மற்றும் உலகத்திற்கும் சிறந்த சாதனையாக கருதப்படும்" என தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கான லண்டன் செய்தி தொட்பாளர் சயீத் ஜுல்ஃபிகர் புகாரி தெரிவித்துள்ளார்.

ஹாங் காங்கின் கடைசி பிரட்டிஷ் கவர்னரான கிறிஸ் பாட்டன் கடந்த பிப்ரவரி மாதம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்த விலகினார். இதனால் வேந்தர் பதவி காலியாக உள்ளது.

10 வருட வேந்தர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் விவரங்கள் அக்டோபர் மாதம் வரை வெளியிடப்படாது. அக்டோபர் மாதம் கடைசியில் வாக்கெடுப்பு நடைபெறும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தத்துவம், அரசியல், பொருளாதாரம் படிப்பு முடித்த இம்ரான் கான் 1975-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

தலைசிறந்த கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், கிரிக்கெட் விளையாடும் காலத்தில் இம்ரான் கான் பிளேபாய் போன்று வாழ்ந்தவர். பிரிட்டிஷ் கிசுகிசு பத்திரிகையில் தொடர்ந்து இடம் பிடித்தவர்கள் ஒருவர்.

நடிகை ஜெமிமா கோல்டுஸ்மித் உள்ளிட்ட மூன்று பேரை திருமணம் செய்துள்ளார். இவர் 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News