பாகிஸ்தானின் இன்றைய நிலைக்கு அதன் 'கர்மா' தான் காரணம் - ஐ.நா. சபையில் ஜெய்சங்கர் தாக்கு
- சர்வதேச சமூகத்திற்கு ஆற்றிய பங்கை விட அதிக ஆதாயத்தை சில நாடுகள் பெற்று வருகின்றன.
- பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை [ POK] மீட்பதே எங்களின் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையின் 79 வது பொதுச்சபை கூட்டம் நேற்று அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்றது. இதில் உலக நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் கலந்துகொண்டு பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார்.
ஐ.நா. கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசியதாவது, மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் நாம் இங்கு கூடியுள்ளோம். உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை இந்தியா தொடர்ந்து சர்வதேச சமூகத்தை எச்சரித்து வருகிறது. உக்ரைன் மற்றும் காசா பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். சர்வதேச சமூகத்திற்கு ஆற்றிய பங்கை விட அதிக ஆதாயத்தை சில நாடுகள் பெற்று வருகின்றன. பல நாடுகள் ஐ.நா.வின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால் பின்தங்கியுள்ளன.
ஆனால் சில நாடுகள் தெரிந்தே அழிவுப் பாதையை தேர்ந்தெடுகின்றன. உதாரணமாக எங்களின் அண்டை நாடான பாகிஸ்தானைச் சொல்லலாம். இல்லை கடந்த பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. பாகிஸ்தானின் ஏற்றுமதியையும் இறக்குமதியையும் பயங்கரவாதத்தை வைத்தே அளவிட முடியும்.
மற்ற நாடுகளுக்குத் தீமை நடக்க வேண்டும் என்று நினைத்த அவர்களின் கர்மாவினால் தான் இப்போது இந்த நிலையில் [பொருளாதார நிலையின்மையினால் ஏற்பட்ட வறுமையில்] பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாதம் என்றும் வெற்றியடையாது. பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை [ POK] மீட்பதே எங்களின் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.