உலகம்

நேபாளம் பசுபதிநாதர் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2,000 அபராதம்

Published On 2023-09-16 22:13 GMT   |   Update On 2023-09-16 22:13 GMT
  • நேபாளத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திப் பெற்றது பசுபதிநாதர் கோவில்.
  • அங்கு புகைப்படம் எடுத்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்தது.

காத்மண்டு:

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்திப் பெற்ற பசுபதிநாத் கோவில், பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்தக் கோவில் வளாகத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி கோவிலுக்கு வரும் இளைஞர்கள் சிலர் ஆர்வமிகுதியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் இனிமேல் ரூ.500 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல டீஜ் பண்டிகை இன்று தொடங்கியுள்ள சூழ்நிலையில், பசுபதிநாத் கோவில் நிர்வாகம் இதுபோன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News