அபுதாபியில் இந்து கோவில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.. லைவ் அப்டேட்ஸ்
- பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அமீரகம் சென்றுள்ளார்.
- அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அபுதாபியில் இந்திய சமூகத்தினர் கலந்து கொண்ட பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பாரத் மார்ட் வணிக மையத்தை திறந்து வைத்தார். இதோடு, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார்.
அபுதாபி சுவாமி நாபாயண கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்
கோவில் வளாகத்தில் உள்ள சிற்பங்கள் மற்றும் கோவிலின் மாதிரியை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்
அபுதாபியில் உள்ள சுவாமி நாராயண கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
இந்த கோவிலை கட்ட அபுதாபி மன்னர் 13.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுதவிர அபுதாபி அரசு சார்பில் 13.5 ஏக்கர் நிலம் இந்த கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது.
இந்த கோவில் 108 அடி உயரம், 262 அடி நீளம் மற்றும் 180 அடி அகலத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அபுதாபியில் உள்ள சுவாமி நாராயண கோவிலில் சிவன், நாராயணன், ராமர் உள்ளிட்ட ஏழு தெய்வங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு உள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ள முதல் கற்கோவில் என்ற சிறப்பை சுவாமி நாராயண கோவில் பெற்று இருக்கிறது.
இந்திய பாடகர்கள் சோனு நிகம், ஷங்கர் மகாதேவன், நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்டோர் சுவாமி நாராயண கோவிலுக்கு வந்துள்ளனர்.
பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண கோவிலை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.