உலகம்

இரு தீமைகளில் குறைவானதை தேர்வு செய்யவேண்டும்: டிரம்ப், கமலா ஹாரிசை சாடிய போப்

Published On 2024-09-13 22:21 GMT   |   Update On 2024-09-13 22:21 GMT
  • ரோம் திரும்பும் விமானத்தில் போப் பிரான்சிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
  • அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இருவரும் வாழ்க்கைக்கு எதிரானவர்கள் என்றார்.

ரோம்:

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், சிங்கப்பூர் சென்றுவிட்டு ரோம் திரும்பும் விமானத்தில் போப் பிரான்சிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் அமெரிக்க தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் ஆகிய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் வாழ்க்கைக்கு எதிரானவர்கள்.

புலம்பெயர்ந்தோரை துரத்துகிறவராக இருந்தாலும் சரி, அல்லது குழந்தைகளைக் கொல்பவராக இருந்தாலும் சரி. இரண்டும் வாழ்க்கைக்கு எதிரானது.

இரண்டு தீமைகளில் குறைவானதை ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு தீமைகளில் குறைவானவர் யார்? அந்தப் பெண்மணி அல்லது அந்த ஜென்டில்மேன் எனக்குத் தெரியாது.

அமெரிக்க கத்தோலிக்க வாக்காளர்கள் தங்கள் மனசாட்சியை ஆராய்ந்து வாக்களிக்கச் செல்வதற்கு முன் அந்த முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News