உலகம்

புஷ்ப கமல் தஹால்

நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹால் நியமனம்

Published On 2022-12-25 16:40 GMT   |   Update On 2022-12-25 16:48 GMT
  • நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹாலை அந்நாட்டு ஜனாதிபதி நியமனம் செய்தார்.
  • புஷ்ப கமல் தஹார் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

காத்மண்டு:

275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள பாராளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

நேபாளத்தில் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்தது. முதல் இரண்டரை ஆண்டுகள் தாம் பிரதமர் பதவி வகிப்பதாக ஒப்பந்தமும் செய்தது.

இதற்கிடையே, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசந்தா இன்று அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்து பிரதமருக்கான உரிமை கோரினார். அப்போது தனக்கு ஆதரவளிக்கும் 169 எம்.பி.க்களின் பட்டியலையும் அளித்தார்.

இந்நிலையில், நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவை நியமனம் செய்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புஷ்ப கமல் தஹர் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News