உலகம்

பாகிஸ்தானில் அமையும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்கா

Published On 2024-02-13 02:36 GMT   |   Update On 2024-02-13 03:13 GMT
  • பாகிஸ்தானில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
  • நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.

பாகிஸ்தானில் கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இம்ரான் கான், நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் கட்சிகளுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வருகிறது.

பாகிஸ்தானை காப்பாற்ற நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தனிப்பட்ட முறையில் நாங்கள்தான் அதிக இடம் பெற்றுள்ளோம். அதனால் எங்களைத்தான் ஆட்சி அமைக்க அழைப்பார்கள் என இம்ரான் கான் கட்சி தெரிவித்து வருகிறது.

இதனால் இரண்டு பக்கத்தில் இருந்தும் வெற்றி பெற்றவர்களை இழுப்பதற்கான குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் எந்த அரசு அமைந்தாலும் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தேர்தலின்போது முறைகே நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்தமுள்ள 264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. தனிப்பட்ட கட்சி அளவில் எடுத்துக் கொண்டால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோ கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து பார்த்தால் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் வரும். இது ஆட்சி அமைக்க போதுமானது.

நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இவர்களுக்கு (75+54) 129 இடங்கள் உள்ளன. இன்னும் 4 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. சுயேட்சை வேட்பாளர்களை இழுக்க வாய்ப்புள்ளது. அல்லது சிறிய கட்சிகளை இணைத்துக் கொள்ளலாம்.

Tags:    

Similar News